பெங்களூரு: முன்னாள் பிரதமரும், ஜேடி(எஸ்) கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடாவுக்கு (92) திங்கள்கிழமை இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கனரகத் தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சரும், தேவகவுடாவின் இளைய மகனுமான குமாரசாமி, நேற்று தனது தந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

பின்னர், குமாரசாமி கூறுகையில், “முன்னாள் பிரதமர் தேவகவுடா நலமாக உள்ளார். அவரது உடல்நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை. “கடவுளின் மற்றும் மக்களின் ஆசீர்வாதத்தால், அவர் நலமாக உள்ளார்.
அவரது உடல்நிலை சீராகி வருவதால், மூன்று முதல் நான்கு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்,” என்று அவர் கூறினார்.