ஜம்மு காஷ்மீர் மாநிலம் வைஷ்ணவி தேவி கோவில் மலைப்பாதையில் அமைக்கப்படவுள்ள ரோப்கார் திட்டத்திற்கு, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ராவில் வைஷ்ணவி தேவி மலைக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 80 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு வயதான பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வசதியாக ரூ.250 கோடி செலவில் ரோப்கார் திட்டம் அமைக்க வைஷ்ணவி தேவி கோயில் வாரியம் முடிவு செய்தது. 2.4 கி.மீ., மலைப்பாதையில் அமைக்கப்படும் ரோப்வே திட்டத்தால், கோவிலை 6 நிமிடங்களில் எளிதாக சென்றடையும். வைஷ்ணவ தேவி மலைப்பாதையில் வியாபாரம் செய்பவர்கள், சுமை தூக்குபவர்கள், குதிரை வண்டிகள் மூலம் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர்.
ரோப்வே திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நூற்றுக்கணக்கான வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனம் மற்றும் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது குறித்து மாவட்ட எஸ்பி பரம்வீர் சிங் கூறியதாவது: இங்கு சட்டம் ஒழுங்கு சவாலாக உள்ளது. இங்கு கடந்த 4 நாட்களாக போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.