புதுச்சேரி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று கூறியதாவது:- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றாக இருக்கிறார். அவரது அழைப்பை ஏற்று முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

புதுச்சேரியைச் சுற்றியுள்ள வானூர், செஞ்சி, திண்டிவனம், இரும்பை பகுதிகள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்காவிட்டால், மாநிலம் பின்தங்கிய நிலையிலேயே இருக்கும். புதுச்சேரியில் தொழில் தொடங்க யாரும் வருவதில்லை என முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தெரிந்த தொழிலதிபர்களை அழைத்து வருமாறு ரங்கசாமி கேட்டுக் கொண்டார்.