பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்எஸ்எஸ்சி பொதுத் தேர்வு முடிவடைந்து விடைத்தாள்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகாவில் உள்ள நிப்பானி விடைத்தாள் திருத்தும் மையத்தில், மாணவர் ஒருவர் விடைத்தாளில் ரூ.500 நோட்டை வைத்து, ‘எப்படியாவது என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள்; இல்லையெனில் என் காதல் தோல்வியடையும்.

அந்த பொண்ணு நான் எஸ்.எஸ்.எல்.சி பாஸ் ஆன பிறகுதான் என்னை லவ் பண்ணுவா. நான் காதலிக்கும் பெண் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் என்னை காதலிப்பேன் என கூறியுள்ளார். எனவே தயவு செய்து இந்த ரூ.500ஐ டீ செலவிற்கு வைத்துக்கொண்டு என்னை பாஸ் போட்டுவிடுங்கள்” என்று அவர் எழுதியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.