
மே 9ம் தேதி, ரஷ்யா சோவியத் யூனியனுக்கும் ஜெர்மனியின் நாஜி படைகளுக்கும் இடையில் 1941ம் ஆண்டு தொடங்கி 1945ம் ஆண்டு வரை நடைபெற்ற போரின் வெற்றியின் 80வது ஆண்டு தினத்தை கொண்டாடுகிறது. இந்த வெற்றியின் நினைவாக, மாஸ்கோவில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க ரஷ்ய அதிபர் வலிடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளார்.
இந்த போரின் போது, நாஜி படைகள் எந்த விதமான நிபந்தனைகளையும் இன்றி சோவியத் யூனியனிடம் சரண் அடைந்தன. அதன் 80வது ஆண்டு சிறப்பாக கொண்டாடும் வகையில், ரஷ்யா, தனது நட்பு நாடுகளின் தலைவர்களை அழைத்து இந்த விழாவுக்கு காத்திருப்பதாக அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியை அதிகாரப்பூர்வமாக அழைத்ததை, ரஷ்ய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி கடைசியாக 2024 ஜூலை மாதத்தில் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த பயணத்தில், அவர் ரஷ்ய அதிபர் புடினை இந்தியா வரும்படி அழைத்திருந்தார். ஆனால், அந்த அழைப்பின் பின்னர், புடினின் இந்திய வருகைக்கான தேதிகள் இதுவரை வெளியிடப்படவில்லை.