இந்தியாவின் சித்தாந்தத்தை ஆளும் பாஜக தாக்கி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் X சமூக ஊடக தளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “இந்தியாவின் சித்தாந்தம் இன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பா.ஜ.க.,வின் சித்தாந்தத்தால் தாக்கப்படுகிறது. கோடிக்கணக்கான இந்தியர்களிடம் இருந்து இந்தியாவின் சொத்து பறிக்கப்பட்டு, பிரதமருக்கும், பா.ஜ.க.,வுக்கும் நெருக்கமான சில தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. வேலையின்மை அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்கிறது. இதற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். இந்தச் சண்டை இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களுக்கு இடையிலானது.

இது இரண்டு அரசியல் அமைப்புகளுக்கு இடையில் இல்லை. இந்தியாவின் சித்தாந்தத்தைப் பாதுகாப்பதற்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.