புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பருத்தி ஜவுளி உற்பத்தி குடும்பத்தை சந்தித்து உரையாடினார். இந்த உரையாடலின் வீடியோ காட்சிகளை ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், “இந்தியாவின் ஜவுளி பாரம்பரியம் ஒப்பிடமுடியாதது.

ஒவ்வொரு 100 கி.மீ.க்கும் ஒரு புது ஜவுளி பாரம்பரியம், புது கலை வடிவம், புது கதை. ஆனால் நமது விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் சீனாவை விட இந்தியா 10 மடங்கு பின்தங்கி உள்ளது. ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள அனைவருக்கும் சரியான உள்கட்டமைப்பை வழங்குவது, ஜவுளி சந்தையை இந்தியா மீண்டும் பெற உதவும்,” என்று அவர் வலியுறுத்தினார்.