இந்துக்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.
சமீபத்தில் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அவர் தெரிவித்த சில கருத்துக்கள் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து என்று கூறிக்கொள்பவர்கள் வன்முறையாளர்கள், பிறரை வெறுப்பவர்கள், பொய் பேசுபவர்கள் என ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் ராகுல் காந்தி அவமதித்துள்ளார்.
உலக வரலாற்றில் மதத்தின் பெயரால் சண்டையிடாத மதம் சனாதன ஹிந்து தர்மம் என்றும், தன் மதத்தை புண்படுத்தியவர்களுக்கும் பலன் தரக்கூடிய மதம் என்றும், இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்தி இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.