டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி இன்று அதிகாரப்பூர்வமாக தனது பணிகளை தொடங்கினார்.
18-வது மக்களவையின் சபாநாயகராக பதவியேற்ற ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மக்கள் பேரவை சபாநாயகராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு இந்தியக் கூட்டணி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுக்கு அரசியல் அதிகாரம் உள்ளது; ஆனால் எதிர்க்கட்சிகள். அவை இந்திய மக்களின் குரலை பிரதிபலிக்கின்றன. இம்முறை எதிர்க்கட்சியானது மக்களின் குரலை பிரதிபலிக்கிறது.
அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறோம். சபாநாயகரின் பணியை செய்ய எதிர்க்கட்சிகள் உதவுவார்கள். நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒத்துழைப்பு நடக்கும்.
மக்களின் குரலை பிரதிபலிக்கும் வகையில் சபாநாயகர் சபையில் நடுவராக செயல்பட வேண்டும். இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்க அனுமதிக்க வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தை எதிர்க்கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு அளித்து அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் கடமையை சபாநாயகர் செய்வார் என நம்புகிறேன். அவை எவ்வளவு திறமையாக இயங்குகின்றன என்பது ஒரு பிரச்சனையல்ல.
இந்த அவையில் இந்திய மக்களின் குரல் எந்த அளவுக்கு ஒலிக்க அனுமதிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கி இந்த சபையை திறமையாக நடத்தலாம் என்ற எண்ணம் ஜனநாயகத்திற்கு எதிரானது.
எதிர்க்கட்சிகள் அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்த்து மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் பேச அனுமதித்து அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் கடமையை சபாநாயகர் நிறைவேற்ற வேண்டும்,” என்றார்.