லக்னோ: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா போன்ற இடங்களில் உள்ள பிரபல கோவில்களின் பிரசாதம் தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்வதில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என பலரும் குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் நேற்று கூறியதாவது:- கோவில் பிரசாதம் வழங்க தனியார் நிறுவனங்கள் தடை விதிக்க வேண்டும். மேலும் பிரசாதம் சம்பந்தப்பட்ட கோவில் அர்ச்சகர்களின் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டும்.
அதேபோல், கோவில்களுக்கு பக்தர்கள் அளிக்கும் நெய்யின் தரம் தெரிய வேண்டும். நாடு முழுவதும் உள்ள கோவில்களுக்கு வழங்கப்படும் எண்ணெய் மற்றும் நெய்யின் தரம் தெரிய வேண்டும். கோவில்களின் புனிதத்தை கெடுக்கும் சர்வதேச சதி இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மதுரா கோயில் தர்ம ரக்ஷா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணிக ரீதியாக தயாரிக்கப்படும் இனிப்புகளுக்கு பதிலாக பழங்கால சமையல் முறைப்படி இனி கோயில் பிரசாதம் தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.
மதுரா கோவில் தர்ம ரக்ஷா சங்கத்தின் தேசிய தலைவர் சவுரப் கவுர் கூறுகையில், “பிரசாத நடைமுறைகளை சீர்திருத்த வேண்டிய நேரம் இது. எனவே, பாரம்பரிய முறைப்படி சுத்தமான, சாத்வீக பிரசாதங்களை தயாரிக்க மத தலைவர்களிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்,” என்றார்.
இதற்கிடையில், பிரயாக்ராஜில் உள்ள பல்வேறு கோயில்களில் இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்படாது என்று கோயில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பதிலுக்கு தேங்காய், பழம் மற்றும் உலர் பழங்களை பிரசாதமாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.