மும்பை: கே.ஒய்.சி. (Know Your Customer) ஆவணங்களை கேட்டு வாடிக்கையாளர்களை மீண்டும், மீண்டும் அழைப்பதை தவிர்க்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, ஒரு வாடிக்கையாளர் நிதி நிறுவனத்திற்கு ஏற்கனவே ஆவணங்களை சமர்பித்த பிறகு, மீண்டும் அவற்றை திரும்ப எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

கே.ஒய்.சி. என்பது “வாடிக்கையாளர் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்” என்ற கோரிக்கைக்கு உட்பட்ட ஆவணப் பதிவாகும். இது வாடிக்கையாளர்களிடம் தேவையான ஆவணங்களை கேட்கும் ஒரு நடைமுறையாகும். அதற்கிணங்க, வாடிக்கையாளர்களுக்கு நேர்மறையான அனுபவம் அளிக்கும் வகையில், வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை எளிதாக்க வேண்டும்.
மேலும், அவர் தெரிவித்தார், மத்திய தரவு தளத்தில் இருந்து வாடிக்கையாளர் விபரங்களை பெற வங்கிகளுக்கு அனுமதி உள்ளது. ஆனால் பெரும்பாலான வங்கிகள் தங்களின் கிளைகள் மற்றும் அலுவலகங்களுக்கு அந்தத் தரவை பெற அனுமதிப்பதில்லை. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
கே.ஒய்.சி. மறுசமர்ப்பிப்பு கோரிக்கைகள் மூலம் ஏற்படும் சிரமங்களை குறைத்துக் கொள்ள, வங்கிகள் தங்களின் குறை தீர்க்கும் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் முதல் கிளை மேலாளர்கள் வரை, ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று மல்ஹோத்ரா கூறினார்.