ஜம்மு: அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு செய்ய ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இமயமலையில் உருவாகும் பனி லிங்கத்தை காண அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ளது.

ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 9-ம் தேதி யாத்திரை நிறைவடையும். இந்நிலையில் புனித யாத்திரைக்கான நேரடி முன்பதிவு நேற்று தொடங்கியது. ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் நாடு முழுவதும் உள்ள 540 வங்கிக் கிளைகளில் முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மேலும், அதன் ஆன்லைன் இணையதளத்தில் முன்பதிவு நேற்று முன்தினம் காலை தொடங்கியது.