புதுடெல்லி: விரைவில் புதிய கையெழுத்துடன் வெளியாகிறது ரூ.50 நோட்டு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி காலம் 2024 டிசம்பர் மாதம் முடிவடைந்ததை அடுத்து, புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார்.
இந்நிலையில், புதிய ஆளுநரின் கையொப்பத்துடன் புதிய ரூ.50 நோட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும், இந்த ரூபாய் நோட்டுகளில் எந்த மாறுபாடும் இருக்காது கையொப்பம் மட்டுமே மாறி இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.