மும்பை: இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ரிசர்வ் வங்கி 25 டன் தங்கத்தைச் சேர்த்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் இருப்பு 879.59 டன்களாக அதிகரித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் எடுத்த பரஸ்பர வரி நடவடிக்கைகளால் ஏற்பட்ட வர்த்தகப் போர் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில், 2025 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ரிசர்வ் வங்கி தனது இருப்பில் 25 டன் தங்கத்தைச் சேர்த்துள்ளது. தற்போது, இந்திய ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 879.59 டன் தங்க இருப்பு உள்ளது.