ராயல் என்ஃபீல்டு, இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக, கடந்த 2025 ஜனவரி மாதத்தில் வெகுவாக அதிக விற்பனை பெற்றுள்ளது. 2024 ஜனவரியுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஜனவரியில் 10,000க்கும் அதிகமான பைக்குகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2025 ஜனவரியில் மொத்தம் 81,052 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 ஜனவரியில் விற்கப்பட்ட 70,556 பைக்குகளை விட 10,496 அதிகம். மேலும், கடந்த 2024 டிசம்பரில் விற்பனை 67,891 ஆக இருந்த நிலையில், தற்போது விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
விற்பனையில் முதல் இடத்தில் கிளாசிக் 350 மாடல் உள்ளது. கடந்த மாதத்தில் 30,582 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, புல்லட் 350 (19,163 யூனிட்கள்), ஹண்டர் 350 (15,914 யூனிட்கள்) ஆகியவை அதிகம் விற்பனையான பைக்குகளாக உள்ளன. 350சிசி மீட்டியோர் மாடல் 8,373 யூனிட்கள் விற்பனையாகி 4வது இடத்தை பிடித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு 2027ம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு புதிய மாடல் வெளியிடும்.