புது டெல்லி: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்ததற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நேற்று முதல் முறையாக 86 ஐத் தொட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 86.04 ஆக உள்ளது.
வலுவான அமெரிக்க டாலரும், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறுவதும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி நேற்று எக்ஸ் தளத்தில், ‘டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக ஒரு டாலரின் மதிப்பு 86.4 ரூபாயாக மாறியுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, டாலரின் மதிப்பு 58-59 ரூபாயாக இருந்தபோது, ரூபாயின் மதிப்பை மத்திய அரசின் மரியாதையுடன் இணைத்து மோடி பேசினார். அவருக்கு எல்லாம் தெரியும்.
எந்த நாட்டின் நாணயமும் இப்படி வீழ்ச்சியடைய முடியாது என்று மோடி கூறினார். இன்று அவர் பிரதமராக உள்ளார். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியில் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அவர் நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும், என்றார்.