நாட்டில் செல்வத்தை உருவாக்கும் தொழிலதிபர்கள் அரசியல் சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என பிரபல ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். அவர் தனது X பதிவில், “நாம் உலக ஜனநாயகத்தின் உருவகமாக இருக்க விரும்பும்போது, இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்படும் குழப்பங்களைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.

இந்தியாவில் செல்வத்தை உருவாக்குபவர்கள் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குபவர்கள் அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதுபோன்ற சர்ச்சைகளுக்குள் இழுக்கப்படாமல், நாட்டின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கான முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மோதல்கள் இருந்தால், அவை சரியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்.