சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் அனுமன் மகாதேஸ்வர மலை சூளியடி கிராமத்தில் உள்ள சாலூர் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாரம்மா கோவிலில் 2018 டிசம்பர் 14ம் தேதி திருவிழா நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் வாந்தி, பேதியால் அவதிப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுகுறித்து விசாரணை நடத்திய சூளியடி போலீசார், கோவில் பிரசாத்தில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. விசாரணை நடத்தி, சாலூர் மடத்து இளைய சுவாமிகள் இம்மதி மகாதேவசாமி, அம்பிகா, மகாதேவசாமி, தொட்டய்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில், மூத்த மடாதிபதி, அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில், பிரசாதத்தில் விஷம் கலந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நாள் முதல் 4 பேரும் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாடி மகாதேவசாமி தனது உடல் நிலையைக் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சாம்ராஜ் நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இம்மதி மகாதேவசாமி மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணை நடத்திய நீதிபதி பாரதி, மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.