
பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளை கண்காணிக்க ஒரு புதிய செயற்கைக்கோள் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.22,500 கோடியாகும். இந்த திட்டம் பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு அக்டோபரில் ஆரம்பமானது. இது SBS-3 என்ற விண்வெளி கண்காணிப்பு திட்டமாகும்.
காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இந்திய அரசு உளவுத்துறை தகவல்களை மேம்படுத்தும் நோக்கத்தில் செயற்கைக்கோள்கள் தயாரிப்பை விரைவுபடுத்தியுள்ளது.

மொத்தம் 52 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதில் 31 தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மீதமுள்ள 21 ஐஸ்ரோவால் தயாரிக்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள்கள் இந்திய எல்லைகளையும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும்.இஸ்ரோவின் சதீஷ் தவான் மையம் மற்றும் SpaceX ஆகியவை ராக்கெட்டுகளின் மூலம் இந்த செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
அனந்த் டெக்னாலஜிஸ், சென்டம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் நிறுவனங்கள் இதில் முக்கிய பங்காற்றுகின்றன.முன்னர் நான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது 12 முதல் 18 மாதங்களுக்குள் செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இது நாட்டின் பாதுகாப்பையும், உளவுத்துறை திறனையும் பலப்படுத்தும்.இந்த திட்டம் இந்தியாவை உலகளவில் ஒரு முக்கிய வலிமையாக உயர்த்தும் என்றும், விண்வெளித் துறையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்