புதுடில்லி: பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ், பிரதமர் மோடியின் 2-வது முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மோடி பிரதமராக இருக்கும் வரையில் (அ) அடுத்த உத்தரவு வரும்வரையில், அவர் இந்த பதவியில் தொடர்வார்.
2019-ம் ஆண்டு முதல் பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஷ்ரா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2018 முதல் 6 ஆண்டுகளாக RBI கவர்னராக பதவிவகித்த சக்திகாந்த தாஸ், கடந்த டிசம்பரில் ஓய்வுபெற்றார்.