மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக 6.5% ஆக மாறாமல் இருந்த ரெப்போ விகிதம் பிப்ரவரியில் 0.25% குறைக்கப்பட்டது. வட்டி விகிதக் குறைப்புக்குப் பிறகு, ரெப்போ விகிதம் 6.25% லிருந்து 6% ஆகக் குறைந்துள்ளது.

ரெப்போ ரேட் குறைப்பால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. கடந்த 2 மாதங்களில் ரெப்போ விகிதத்தை அரை சதவீதம் குறைத்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சியால் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பில் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. பணவீக்க விகிதத்தை 4%-க்குள் கட்டுப்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி நம்பிக்கை கொண்டுள்ளது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.