பெங்களூரு: எரிபொருள் விலைகள் மற்றும் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், மக்களுக்கு சிக்கனமான பயணத்தை வழங்கவும் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் மின்சார வாகனங்கள் உருவாகியுள்ளன. தற்போது, இந்த வாகனங்களை இயக்கத் தேவையான பேட்டரி லித்தியம்-அயன் தொழில்நுட்பத்தால் ஆனது. இந்த பேட்டரிகளின் விலை அதிகமாக உள்ளது.

இது உலகளவில் லித்தியம் வளங்களின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில், பெங்களூரு விஞ்ஞானிகள் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக சக்திவாய்ந்த சோடியம்-அயன் பேட்டரியைக் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பேட்டரியை வெறும் 6 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும்.
இது நீண்ட காலம் நீடிக்கும். பேராசிரியர் பிரேம்குமார் செங்குட்டுவன் மற்றும் முனைவர் பட்ட மாணவர் பிப்லப் பத்ரா தலைமையிலான விஞ்ஞானிகளால் இது உருவாக்கப்பட்டது.