டெல்லி: இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில், பாலஸ்தீனத்தில் 17,000 குழந்தைகள் உட்பட 84,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அட்டூழியங்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு கூட எழுப்பாமல் மோடி மௌனம் காப்பது வெட்கக்கேடானது மற்றும் கோழைத்தனமானது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிக்கின்றன.

காசா-இஸ்ரேல் பிரச்சினைகளில் மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். அது மௌனப் பார்வையாளராக இருப்பதை நிறுத்த வேண்டும். மக்களுக்கு எதிரான இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
மேலும், இந்தியாவின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும். மோதல்களை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று அது கூறியுள்ளது.