புது டெல்லி: டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்ற தலைமை நீதிபதி வைபவ் சௌராசியா நேற்று முன்தினம் டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி தாக்கல் செய்த மனுவை விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சோனியா காந்தி 1983 ஏப்ரல் மாதத்தில் இந்திய குடியுரிமை பெற்றார். இருப்பினும், அவரது பெயர் 1980-ம் ஆண்டிலேயே டெல்லி சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 1980-ம் ஆண்டிலேயே வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்க அவர் போலி ஆவணங்களை வழங்கியிருக்கலாம்.

எனவே, சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்து, இந்த விவகாரத்தை விசாரித்து தீர்வு காண வேண்டும்” என்று வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து, “இந்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பைப் பறிக்க முடியாது.
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வரும் குடியுரிமை பிரச்சினை குறித்து புகார் அளித்து விசாரணை கோர முடியாது” என்று உத்தரவிட்டார்.