பெங்களூரு: “”குழந்தைகளுக்கான நூலகம் வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என, தமிழ் புத்தக திருவிழாவில் ஐ.ஏ.எஸ்., வினோத் பிரியா பேசினார். கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழாவில் நேற்று மாலை பேசிய வினோத் பிரியா, “உன்னில் இருந்து துவங்கு” என்ற தலைப்பில் பேச உள்ளதாக தெரிவித்தார்.
இந்த தலைப்பு தனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்றார். “எனக்கு புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். இந்த காலத்து இளைஞர்களுக்கு புத்தகம் படிக்க நேரமில்லை” என்று அவர் கவலைப்பட்டார். மேலும், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுக்கும் போது, அதற்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள்” என்றார்.
எனது மகனும் புத்தகம் படிக்க விரும்புவதை ஊக்குவிக்கிறேன்’ என்று கூறிய வினோத் பிரியா, கடந்த ஆண்டு நடந்த தமிழ் புத்தகத் திருவிழாவில் வேலை காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்றார். ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து எனது தமிழ் உறவினர்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான பிராந்திய நூலகத்தை உருவாக்க விரும்புவது குறித்து அவரிடம் கேட்டபோது, ”நாங்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வரலாறு தொடர்பான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார். அவர் பேசுகையில், ‘‘பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வரலாற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.
இந்நிலையில், தமிழ் படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வினோத் பிரியா, “தமிழில் படித்தால் என்ன கிடைக்கும் என்று என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்னிடம் கேட்டார்கள். தமிழில் படிப்பவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள்” என்றார். எனவே, ‘உன்னில் இருந்து துவங்கு’ ஒரு சிறந்த தலைப்பு,” என்று அவர் மேலும் கூறினார்.
அந்த வகையில் அறிவியல் ஆசிரியரிடம் கேள்வி கேட்டு தன்னிடமிருந்தே ஆரம்பித்ததால் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆனார் என்றார்.