புதுடெல்லி: அனைத்து போட்டித் தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை ஆதார் அடிப்படையில் சரிபார்க்க பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் தேர்வாணையங்களில் பணியாளர் தேர்வாணையமான (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) எஸ்.எஸ்.சி.யும் ஒன்றாகும்.
அடுத்த மாதத்தில் இருந்து இனிமேல் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை ஆதார் அடிப்படையில் சரிபார்க்க பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும்போது, விண்ணப்பதாரர்கள் ஆதார் அடிப்படையில் ‘பயோமெட்ரிக்’ மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம். இது, கட்டாயம் அல்ல, விருப்ப அடிப்படையில் செய்யக்கூடியது என்று எஸ்.எஸ்.சி. கூறியுள்ளது.