ஐதராபாத்: எஸ்.எஸ்.எல்.வி D3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
இ.ஓ.எஸ்.8 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது எஸ்.எஸ்.எல்.வி D3 ராக்கெட். குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோ வடிவமைத்த ராக்கெட்தான் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
175.5 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்.8 செயற்கைக்கோள் 475 கி.மீ உயரத்தில் புவி தாழ்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.
இ.ஓ.எஸ். வகை செயற்கைக்கோள்களிலேயே மிகவும் துல்லியமான மற்றும் அதிநவீன கருவிகள் இ.ஓ.எஸ்.8 செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன