அருணாச்சலப் பிரதேசம் : தன்னைப் பற்றி விமர்சனம் செய்த யூடியூபருக்கு நெத்தியடியாக பதிலடி கொடுத்துள்ளார் பிக் பாஸ் போட்டியாளர் சம் தராங்க்.
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் அழகியும், பிக் பாஸ் போட்டியாளருமான சம் தராங்க் குறித்து பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் என்பவர் இனரீதியான கருத்தை பதிவிட்டார்.
அவரது கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அழகி தராங்க், “ஒருவரின் பெயர், அடையாளம் மற்றும் சாதனையை அவமதிக்கும் வகையில் பேசுவது கிண்டல் கிடையாது” என பதிலடி கொடுத்துள்ளார்.