வாஷிங்டன்: உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூன் 7 அன்று, ஸ்டார்லைனர் இரண்டு இந்திய வம்சாவளி விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தது.
அடுத்த 8 நாட்களில் சுனிதா உள்ளிட்ட 2 வீரர்கள் ஸ்டார்லைனர் மூலம் பூமிக்கு திரும்ப இருந்தனர், ஆனால் விண்கலம் ஹீலியம் வாயு கசிவு போன்ற தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்தது. இதனால் இருவரும் பல மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்தது. அதன்படி தற்போது 4 அமெரிக்கர்களும், 3 ரஷ்யர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விண்வெளி மையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் சுனிதா வில்லியம்ஸ், உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதிலுமிருந்து வெள்ளை மாளிகையில் இன்று ஒளியின் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ISS இலிருந்து பூமியிலிருந்து 263 மைல் தொலைவில் தீபாவளியைக் கொண்டாட தனக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறிய அவர், தனது இந்திய வேர்களை நினைவு கூர்ந்தார், தீபாவளி மற்றும் பிற இந்தியப் பண்டிகைகளைப் பற்றி தனது தந்தை தனக்கு எப்படிக் கற்றுக் கொடுத்தார். அவர் தனது கலாச்சார வேர்களையும் பகிர்ந்து கொண்டார்.