வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி, பூமிக்கு திரும்ப உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ. 1.08 கோடியிலிருந்து தலா ரூ. 1.41 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக 10 நாள் பயணமாக விண்வெளிக்குச் சென்றனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இருவரும் 10 மாதங்களாக பூமிக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் மார்ச் 18-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூர் நேரப்படி நாளை (மார்ச் 19 அதிகாலை 3.27 மணி) புளோரிடா கடற்கரை அருகே விண்வெளி வீரர்கள் தரையிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 9 மாதங்கள் விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் விண்வெளியில் தங்குவதற்கு தனி சம்பளம் இல்லை என்று முன்னாள் விண்வெளி வீரர் கூறினார். அதே சமயம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சம்பளமாக ரூ. 1.25 லட்சம் முதல் ஆண்டுக்கு ரூ. 1.62 லட்சம் அமெரிக்க டாலர்கள்.
அதாவது, ரூ. 1 கோடி முதல் இந்திய மதிப்பில் ரூ. 1.40 கோடி சம்பளமாக வழங்கப்படும். ஜிஎஸ் 15 அரசு ஊழியர்கள் என்பதால் இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் இதுதான், விண்வெளி செலவுக்கு சம்பளம் இல்லை என்று கூறப்படுகிறது. விண்வெளியில் 287 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 4 டாலர்கள் வீதம் 1,148 டாலர்கள் (சுமார் ரூ.1 லட்சம்) வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.