பாட்னா: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், பா.ஜ.க, ஆதரவுடன் பீகார் முதல்வராக உள்ளார். மக்களவைத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நிதிஷின் ஆதரவும் முக்கியக் காரணம்.
இந்நிலையில், நிதிஷ்குமாருக்கு உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தள தலைமை அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிதிஷ் குமாரின் படமும், சிறந்த சோசலிஸ்ட் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோஷங்களும் ஒட்டப்பட்டுள்ளன.
ஐக்கிய ஜனதா தள தொண்டர்களின் அமளியால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களிடையே இந்த நடவடிக்கை நிதிஷ்குமாரின் அரசியல் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.