டெல்லி: டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் காற்று மாசு அளவு குறைந்து வருவதால், தினக்கூலி தொழிலாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளை தொடர காற்று மாசு மேலாண்மை குழுவுக்கு உத்தரவிட்டது.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடியாத பள்ளிகளுக்கு நேரில் வகுப்புகளை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மதிய உணவு வழங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரில் வகுப்புகள் நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட 13 வழக்கறிஞர்கள் கொண்ட குழு, காற்று மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.