ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஃபரூக் அப்துல்லா நேற்று கூறியதாவது:-
பயங்கரவாதிகளை கொல்வதற்கு பதிலாக, அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் முழுவதும் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடிக்க இது உதவும். பிடிபட்ட பயங்கரவாதிகள், தாக்குதல்களை நடத்தும் பரந்த வலைப்பின்னல் பற்றிய முக்கிய தகவல்களை வழங்க வாய்ப்புள்ளது.
பேட்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்திரத்தன்மை போக்க முயன்றவர்களால் இந்த தாக்குதல் நடந்ததா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.
பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டால், இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காண முடியும். உமர் அப்துல்லா அரசை சீர்குலைக்க ஏதேனும் ஏஜென்சி முயற்சி செய்கிறதா என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார். ஃபரூக் அப்துல்லாவின் இந்த கருத்து அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.