சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய முக்கிய சோதனையில் 22 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பதுங்கியிருந்த பகுதிகள் குறித்து முன்கூட்டியே கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவட்டத்தின் மூன்று பகுதிகளில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

டெக்மெட்லா கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் 7 பேர், பெல்சார் கிராமத்தில் 6 பேர் மற்றும் கண்டாகர்கா கிராமத்தில் 9 பேர் என மொத்தம் 22 நக்சலைட்டுகள் பிடிபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.