அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழா கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம் இன்று தொடங்குகிறது. இதற்காக நேற்று சரயு நதிக்கரையில் இருந்து ஒரு பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் கோயிலின் முதல் மாடியில் உள்ள ராம் தர்பாரிலும், வளாகத்தின் சுவர்களுக்குள் உள்ள ஆறு கோயில்களிலும் சிலைகள் நிறுவப்படுகின்றன. ஜூன் 5-ம் தேதி கங்கா தசரா விழாவுடன் இணைந்து முக்கிய சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 மற்றும் 4-ம் தேதி காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பூஜைகள் நடைபெறும்.

ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் சிலைகள் மற்றும் ஆறு கோயில்களின் பிரதான பிரதிஷ்டை ஜூன் 5-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.