திருவனந்தபுரம்: மலையாள நடிகை பரபரப்பு புகார் அளித்து, குட் பேட் அக்லி பட நடிகரான ஷைன் டாம் சாக்கோ மீது போதைப்பொருள் பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மலையாள திரையுலகில் பெண்கள் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை, கடந்த வருடம் கேரளாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை உறுதி செய்தது. அதுமட்டும் அல்லாமல், போதைப்பொருள் கலாச்சாரமும் குறித்திருந்தது.
சமீபத்தில், கோழிக்கோடு பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரில் பெண் ஒருவர், பிரபல நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகியோருக்கு தொடர்ந்து போதைப்பொருள் வழங்கி வந்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இது இன்னும் உறுதி செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இளம் நடிகை வின்சி அலோசியஸ் தனது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2023ல் வெளியான ரேகா படத்தில் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட இவர், தனது படங்களில் போதைப் பொருள் பயன்படுத்திய நடிகரின் செயல்பாடுகள் குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.
வின்சி கூறியபடி, “ஒரு படத்தில் பணியாற்றியபோது அந்த படத்தில் முக்கிய நடிகராக நடித்தவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார். ஒரு சமயத்தில் நான் ஒரு தனி அறைக்கு செல்ல முற்பட்ட போது, அவர் என்னுடன் வரும்போது உதவி செய்ய நான் வருவேன் என கூறினார். பின்னர், அந்த நடிகரின் உதட்டில் வெள்ளையான பொருள் வெளிப்பட்டது, அப்போது எனக்கு அவர் போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதியாகிவிட்டது,” என அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், ஷைன் டாம் சாக்கோ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது, மற்றும் இதனை விசாரிக்க, அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றும் சாராயு மோகன் ஆகியோர் அடங்கிய 3 உறுப்பினர்களை கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
புகார் தொடர்பாக முதலில் சாக்கோவிடம் கருத்து கேட்கப்படுவதாக அந்தக் கமிட்டியினர் அறிவித்துள்ளனர். சாக்கோ இதற்கு முன்பே ஆலப்புழா போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு கொள்ளப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷைன் டாம் சாக்கோ அண்மையில் அஜித்தின் “குட் பேட் அக்லி” படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.