உத்தரபிரதேசம்: மகா கும்பமேளாவின் போது நடக்க கூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த உத்தரபிரதேச மாநிலம் இப்போது ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மகா கும்பமேளாவில் விழாக்கோலம் பூண்ட உ.பியின் பிரக்யாராஜ் நகர், தற்போது சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. 60 கோடி மக்கள் பயணித்த அப்பகுதியில் தற்போது, தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆயிரக்கணக்கான தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டு, குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் வெள்ளமாக காட்சியளித்த அப்பகுதி, தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மகா கும்பமேளா இங்குதான் நடந்ததா என்று கேட்டால் ஆச்சரியம்தான் ஏற்படும்.
அந்தளவிற்கு ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு நடக்கவே முடியாமல் இருந்த பகுதிகள் தற்போது ஆட்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.