புதுச்சேரி: புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் மாரடைப்பால் காலமானார். தகவல் அறிந்து அங்கு வந்த புஸ்ஸி ஆனந்த் கதறி அழுததை கண்டு தொண்டர்களும் கண்கலங்கினர்.
புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் தகவலறிந்து புதுச்சேரிக்கு விரைந்து வந்த தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.
புஸ்சி ஆனந்த் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்து வந்த சரவணன், அவருடன் பல ஆண்டுகளாகப் பயணித்து வந்துள்ளார். விக்கிரவாண்டி மாநாட்டுப் பணிகளையும் சரவணன் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புஸ்லி ஆனந்த் கதறி அழுததை கண்டு தொண்டர்களும் கண்கலங்கினர்.