ஒடிசா: ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் 120 கி.மீ. வேகத்தில் டானா தீவிரப் புயலாக கரையைக் கடந்தது. இதனால் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
ஒடிசாவின் பிடர்கனிகா மற்றும் தமரா அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியது
புயல் கரையைக் கடந்தபோது கடல் சீற்றத்தால் பல அடி உயரத்திற்கு அலைகள் மேலெழும்பின. கடலோரப் பகுதிகளில் ஏராளமான மரங்கள் விழுந்தன. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் இருந்து 11 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் 6 லட்சம் பேரும், ஒடிசாவில் 5 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.