உத்தரபிரதேசம்: பிரயக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் தற்காலிகமாக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் முதலாவதாக பிறந்த குழந்தைக்கு ‘மகா கும்ப்’ என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்க உள்ளதால் பிரயக்ராஜில் மகா கும்பமேளா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனையொட்டி பிரயக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் தற்காலிகமாக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் முதலாவதாக பிறந்த குழந்தைக்கு ‘மகா கும்ப்’ என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.