லக்னோ: உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தின் அனைத்து துறைகள் மற்றும் அதிகாரிகளும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை எடுக்க முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து உயிரியல் பூங்காக்கள், பறவை சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், ஈரநிலங்கள் மற்றும் பசு காப்பகங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த வளாகங்கள் சுகாதாரமாக வைக்கப்பட வேண்டும்.
தேவைப்பட்டால், அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் மருத்துவ பரிசோதனைகளை நடத்த முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.