மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளாக பாலிவுட்டில் அறிமுகமானார் ஜான்வி கபூர். இந்தியில் தொடர் படங்களில் நடித்து வெற்றி நடிகையான பிறகு தெலுங்கில் ‘தேவரா’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தற்போது ராம் சரண் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி, ஃபேஷன் ஷோக்களிலும், போட்டோ ஷூட்களிலும் மிகவும் பிஸியாக இருக்கிறார். தற்போது நடிகை ஜான்வி கபூர் லம்போர்கினி காரை ரூ. 9 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
ஜான்வி கபூருக்கு இவ்வளவு விலையுயர்ந்த காரை பரிசளித்தவர், அவரது நெருங்கிய தோழியும், தொழிலதிபருமான அனன்யா பிர்லா. ஜான்வி அனன்யாவுக்கு இதே போன்ற விலையுயர்ந்த பரிசுகளை வழங்குவதாக கூறப்படுகிறது.