புது டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய கடற்படை தனது வலிமையைக் காட்டுகிறது. காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது, வாகா எல்லையை மூடியது, பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவிட்டது. பதிலடி கொடுப்பது குறித்து முடிவெடுக்க பிரதமர் மோடி முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அரபிக் கடலில் கடற்படை கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அவசர காலங்களில் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த விமானப்படை விமானங்கள் பயிற்சி நடத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்திய கடற்படையின் ஊடகப் பிரிவு ஒரு புதிய படத்தை வெளியிட்டுள்ளது. அதில், ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல், துருவா வகுப்பு ஹெலிகாப்டர் மற்றும் ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை ஒன்றாக வரிசையாக நிற்கின்றன.
(கடலில், கடலுக்கு மேலே, கடலுக்கு அடியில்) – கடற்படையின் மூன்று சக்திகளுக்கும் படத்தின் தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. படம் வைரலானது. அனைத்து கடற்படை கப்பல்களும் போருக்கு தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை வெளிப்படுத்தும் விதமாக இந்திய கடற்படை இந்த படத்தை வெளியிட்டுள்ளது.