புனே: கர்நாடகாவில் மராத்தி மொழி பேசும் பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புனே வந்த கர்நாடக பஸ்களில் கன்னட மொழி அழிப்பால் பதற்றம் ஏற்பட்டது.
கர்நாடகாவின் பெலகாவியில் மராத்தி பேசும் பஸ் டிரைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பூதாகரமாகி இருக்கிறது.
இதனை கண்டித்து புனேவுக்கு வந்த கர்நாடக அரசு பஸ்ஸை மறித்து சிவசேனா (UBT) தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அத்துடன் பஸ்ஸில் இருந்த கன்னட எழுத்துகளையும் கருப்பு மை பூசி அழித்தனர்.
இதனால், பதற்றமான சூழல் ஏற்பட, விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களை கலைத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.