மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 28-ம் தேதி மும்பையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பிசிசிஐயின் புதிய தலைவரும் அடுத்த ஐபிஎல் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பிசிசிஐ தலைவராக இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி, 70 வயதை எட்டிய பிறகு இந்த வார தொடக்கத்தில் தனது பதவியில் இருந்து விலகினார். அவர் 2022-ல் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டார்.

பிசிசிஐ அரசியலமைப்பின்படி, 70 வயதுக்கு மேல் எந்த அதிகாரியும் பதவி வகிக்க முடியாது. ஐபிஎல் தலைவராக இருந்த அருண் துமல், பிசிசிஐயில் தனது 6 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளதால், பதவி விலக வேண்டிய நிலையில் உள்ளார்.
இதன் காரணமாக, புதிய ஐபிஎல் தலைவர் அறிவிப்பு வரும் 28-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.