புதுடெல்லி: ரயில் பயணிகள் தங்கள் மொபைல் போன்களில் சொமாட்டோ செயலியைத் திறந்து தங்கள் உணவை ஆர்டர் செய்யலாம். PNR அடிப்படையில், அவர்களின் இருக்கைக்கு உணவு டெலிவரி செய்யப்படும்.
இதற்கான அறிவிப்பை சொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் நேற்று வெளியிட்டார். அதில், “உங்கள் ரயிலுக்கு நேரடியாக உணவு வழங்கப்படும். இதுவரை 10 லட்சம் ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளோம்.
அடுத்த முறை நீங்கள் பயணம் செய்யும் போது, உணவை ஆர்டர் செய்ய முயற்சிக்கவும்,” என்று அவர் கூறினார். ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்த ஐஆர்சிடிசி உறுதிபூண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயணிகளுக்கு பல்வேறு வகையான உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.