புதுடெல்லி: இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்களை இந்தியா அழைப்பது வழக்கம். கடந்த ஆண்டு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பங்கேற்றார்.
இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வரும் பிரபோவோ சுபியாண்டோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்திய பயணத்தை முடித்துக் கொள்ள பாகிஸ்தான் செல்ல பிரபோவோ சுபியாண்டோ திட்டமிட்டிருந்தார். இது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இருப்பினும், தற்போது அவர் இந்த பயணத்தை ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது.