288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மகாயுதி கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக, 132 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மகாயுதி கூட்டணியில் முதல்வர் யார் என்பதில் குழப்பம் நிலவியது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்க விரும்பவில்லை. தனது கட்சிக்கு முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் வரும் 5ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.