கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் வேலையின்மை விகிதம் 6.4 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவித்துள்ளது. அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:-
நகர்ப்புறங்களில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டின் இதே டிசம்பர் காலாண்டில், இந்த விகிதம் 6.5 சதவீதமாக இருந்தது. இருப்பினும், முந்தைய செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில், டிசம்பரில் வேலையின்மை விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இது தொடர்ந்து 6.4 சதவீதமாக நீடிக்கிறது. நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் அக்டோபர்-டிசம்பர் 2024-ல் 8.1 சதவீதமாகக் குறைந்தாலும், 2023-ம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 8.6 சதவீதமாக அதிகரித்தது. இந்த விகிதம் 2024 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 8.4 சதவீதமாக இருந்தது. இது என்எஸ்எஸ்ஓ-ல் தெரிவிக்கப்பட்டது.