புதுடில்லியில் நடந்த ஒரு நிகழ்வு உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க யூடியூபர் ஜெய்ஸ்ட்ரீஸி தனது இந்திய பயணத்தின் போது டிரைவரிடம் ஒரு நாள் சேவைக்கான கட்டணத்தை கேட்டார். டிரைவர் வெறும் ரூ.1250 என்றார். ஆனால் யூடியூபர் அவருக்கு ஆச்சரியமாக ரூ.8500 டிப்ஸ் வழங்கினார். எனினும், அந்த தொகையை டிரைவர் எடுத்து கொள்ள மறுத்துவிட்டார்.
‘எனக்கு இவ்வளவு பணம் தேவையில்லை, இது மிகப்பெரிய தொகை’ என்று அவர் சொன்ன காட்சி இணையத்தில் வேகமாக பரவியது. யூடியூபர் பலமுறை வற்புறுத்தியும் அவர் ஏற்க மறுத்தார். நேர்மையுடன் நடந்துகொண்ட அந்த டிரைவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
அமெரிக்க யூடியூபர் வெளியிட்ட அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகிறார்கள். ‘உழைக்காமல் கிடைக்கும் பணம் வேண்டாம்’ என்ற அந்த டிரைவரின் முடிவு, சமூக ஊழல் மற்றும் பேராசைக்கு எதிரான ஒரு விழிப்புணர்வாகவே மக்கள் கருதுகின்றனர். இது இன்றைய சூழலில் அரிய காட்சி என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய டிரைவரின் பணிவும், பண்பும் சமூகத்தில் நல்லவர்களின் ύ ύள்ளதை உறுதிப்படுத்துகின்றன. பணம் தேவையில்லையென்று அவர் மறுக்கவில்லை; ஆனால் உழைக்காமல் கிடைத்த பணத்தை அவர் ஏற்கவில்லை. இது மக்கள் மனதில் நம்பிக்கையையும், நல்லுணர்வையும் ஊட்டியிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த வீடியோ இந்தியாவின் நம்பகத்தன்மையையும், உண்மையையும் வெளிப்படுத்தி வருகிறது.